இந்தியா

வேறொரு பெண்ணை திருமணம் செய்யவிருந்த முன்னாள் காதலன் மீது ஆசிட் வீச்சு!

சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் வேறொரு பெண்ணை திருமணம் செய்யவிருந்த முன்னாள் காதலன் மீது ஆசிட் வீசிய இளம்பெண்ணை போலீஸார் கைது செய்தனர். 

DIN

சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் வேறொரு பெண்ணை திருமணம் செய்யவிருந்த முன்னாள் காதலன் மீது ஆசிட் வீசிய இளம்பெண்ணை போலீஸார் கைது செய்தனர். 

இதுதொடர்பாக பஸ்தார் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நிவேதிதா பால் கூறுகையில், 

ஏப்ரல் 19-ம் தேதி மணமகன் தம்ருதர் பாகேல்(25). இவர் 19 வயது பெண்ணை திருமணம் செய்யவிருந்த நிலையில், திருமணம் நடைபெறும் இடத்தில் மணமகன் மீது ஆசிட்  தாக்குதல் நடந்துள்ளது. 

இந்த சம்பவம் மாலை நேரத்தில் நடைபெற்றதாலும், அந்த நேரத்தில் மின்சாரம் தடைப்பட்டிருந்ததாலும், குற்றவாளியை பொதுமக்கள் யாரும் கவனிக்கவில்லை. 

அதன்பின்னர், கிராமத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது மணமகள் மற்றும் மணமகளின் பின்னணியை விசாரித்தனர். அதில், மணமகன் முன்னாள் காதலியான ஒரு பெண்ணிடம் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. 

அந்த பெண்ணை பிடித்து விசாரித்ததில், தனக்கும் தம்ருதர் பாகேலுக்கும் கடந்த பல ஆண்டுகளாக உறவு இருப்பதாகவும், தம்ருதர் வேறொரு பெண்ணை திருமணம் செய்யவிருந்த செய்தி கேள்விப்பட்டேன். தன்னை ஏமாற்றிவிட்ட பாகேலை தண்டிக்கவே இவ்வாறு செய்தாக இளம்பெண் தெரிவித்தார். 

விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட பெண் தனது அடையாளத்தை மறைக்க ஆணாக மாறுவேடமிட்டுக் குற்றத்தை செய்ததாகவும் வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். 

ஆசிட் வீச்சு சம்பவத்தில் மணமகன், மணமகள் மற்றும் திருமண விழாவில் கலந்துகொண்ட 10 பேருக்கும் மேல் லேசான தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT