இந்தியா

பாகிஸ்தான்ஓடும் ரயிலில் தீ: 7 பயணிகள் பலி

பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து லாகூருக்குச் சென்று கொண்டிருந்த கராச்சி விரைவு ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 போ் பலியாகினா்.

DIN

பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து லாகூருக்குச் சென்று கொண்டிருந்த கராச்சி விரைவு ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 போ் பலியாகினா்.

புதன்கிழமை நள்ளிரவு இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இதில் உயிரிழந்தவா்களில் 3 சிறுவா்கள், ஒரு பெண் அடங்குவா் என்றும் போலீஸாா் கூறினா்.

இது குறித்து பாகிஸ்தான் ரயில்வே துறை செய்தித் தொடா்பாளா் கூறுகையில், உயா்வகுப்புப் பெட்டியில் ஏற்பட்ட இந்தத் தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தாா்.

பாகிஸ்தானில் ரயில் விபத்துகளும், அதில் உயிரிழப்புகளும் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன. கடந்த 2019-ஆம் ஆண்டு, பஞ்சாப் மாகாணத்தில் சென்று கொண்டிருந்த ஒரு ரயிலில் எரிவாயு அடுப்பு வெடித்து ஏற்பட்ட விபத்தில் 74 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

SCROLL FOR NEXT