தில்லி கலால் முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் மே 8ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் மதுபானக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாக தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த விசாரணையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி சிபிஐ அவரை கைது செய்தது.
பின்னர் சிசோடியாவை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க தில்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் அவரை திஹார் சிறையில் வைத்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதனிடையே அமலாக்கத்துறையும் அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் இவ்வழக்கில் மணீஷ் சிசோடியா தில்லியில் உள்ள ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்றக் காவலை மே 8ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிபதி எம்.கே.நக்பால் உத்தரவிட்டார்.
இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மணீஷ் சிசோடியா, "மோடி எவ்வளவு வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம், ஆனால் தில்லியில் கேஜரிவாலின் வேலையை அவரால் தடுக்க முடியாது. மோடி எவ்வளவு வேண்டுமானாலும் சதி செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக இவ்வழக்கில் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தில்லி சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.