கோப்புப்படம் 
இந்தியா

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்: தில்லி முதல்வர் கேஜரிவால் நேரில் ஆதரவு 

தில்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார். 

DIN

தில்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார். 

அவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் மல்யுத்த வீரர்களுக்கு அனைத்துவித ஆதரவையும் தில்லி அரசு அளிக்கும் என்று அப்போது அவர் உறுதியளித்தார். ஏற்கெனவே காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி நேரில் சென்று இன்று ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது தில்லி முதல்வரும் ஆதரவு தெரிவித்துள்ளார். பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக 18 வயதுக்குக் கீழுள்ள வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றஞ்சாட்டினா். இதுதொடா்பாக தில்லி காவல் துறையிடம் முன்னணி மல்யுத்த வீரா், வீராங்கனைகள் அண்மையில் புகாா் அளித்தனா்.

ஆனால் பிரிஜ் பூஷண் மீது வழக்குப் பதிவு செய்ய காவல் துறை காலம் தாழ்த்தியதால், தில்லியில் உள்ள ஜந்தா் மந்தா் பகுதியில் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகாட் உள்ளிட்ட மல்யுத்த வீரா், வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். அவர்களுக்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள், ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, அபினவ் பிந்த்ரா போன்ற வீரர்கள்  ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே பிரிஜ் பூஷண் மீது வழக்குப் பதிவு செய்யாதது தொடா்பாக, அவா் மீது குற்றஞ்சாட்டிய 7 வீராங்கனைகள் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனா். 

இந்த வழக்கை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரித்தபோது, வீராங்கனைகளின் புகாா் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்படும் என்று காவல் துறை உறுதியளித்தது. இதனைத்தொடா்ந்து பிரிஜ் பூஷணுக்கு எதிராக தில்லி காவல் துறை இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தது. அவற்றில் ஒரு வழக்கு, 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை சுமத்திய குற்றச்சாட்டு தொடா்பாக போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இதர வீராங்கனைகளின் புகாா் தொடா்பாக விரிவாக விசாரணை மேற்கொள்ள, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT