இந்தியா

நாடாளுமன்றத்தில் தொடர் அமளி: மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி மற்றும் அரசின் வியூகம் குறித்து பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

DIN

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி மற்றும் அரசின் வியூகம் குறித்து பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

தில்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்களான அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இருஅவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 

மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. மணிப்பூர் வன்முறை கலவரம் தொடர்பாக இரு அவைகளும் தொடர்ந்து 10 நாள்களாக முடங்கி வருகின்றன. 

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பங்கேற்று மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். 

இதையடுத்து, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் இன்று சந்தித்துப் பேசியுள்ளனர். 

மணிப்பூரில் கடந்த 3 மாதங்களாக கலவரம் நீடித்து வரும் நிலையில், அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT