சானியா மிர்சா - சோயிப் மாலிக் தம்பதி 
இந்தியா

இன்ஸ்டாவில் சுயவிவரத்தை மாற்றிய சோயிப் மாலிக்:  சானியாவுடன் விவாகரத்தா?

இன்ஸ்டா பக்கத்தில், தனது விவரத்தை சோயிப் மாலிக் மாற்றியிருப்பது, இருவரின் ரசிகர்களிடையே மீண்டும் விவகாரத்துக் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

DIN


சானியா மிர்சா - சோயிப் மாலிக் தம்பதியர் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், இன்ஸ்டா பக்கத்தில், தனது விவரத்தை சோயிப்மாலிக் மாற்றியிருப்பது, இருவரின் ரசிகர்களிடையே மீண்டும் விவகாரத்துக் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப்மாலிக்கும் 2010ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். திருமணமாகி சில ஆண்டுகளில், அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், இருவரும் விவகாரத்துக் கோரவிருப்பது குறித்த தகவலுக்கு சோயிப்மாலிக் மறுப்புத் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே இவர்கள் விவாகரத்துக் கோர இருப்பதாக செய்திகளும் புரளிகளும் பரவி வந்தன. பிறகு, தி மிர்சா மாலிக் ஷோவில் இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

ஆனால், திடிரென, சோயிப்மாலிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் சுயவிவரக் குறிப்பிலிருந்து, சானியா மிர்சாவைப் பற்றிய தகவலை நீக்கியிருப்பது மீண்டும் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

அதாவது, சோயிப்தனது இன்ஸ்டாவில் மிகச் சிறந்த பெண்மனி சானியா மிர்சாவின் கணவர் என்று பதிவிட்டிருந்தார். அதனை அவர் ஒட்டுமொத்தமாக நீக்கிவிட்டார். இதுதான் ரசிகர்களின் கவலைக்குக் காரணமாகியிருக்கிறது.

இதனால், இவர்கள் இருவரும் மீண்டும் விவாகரத்துக் கோர இருக்கலாம் என்ற புரளியைக் கிளப்பியிருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்! குடியிருப்புகளை அடித்துச் செல்லும் காட்சி! | Uttarakhand flood

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

SCROLL FOR NEXT