இந்தியா

தில்லி பாஜக துணைத் தலைவராக கபில் மிஸ்ரா நியமனம்

தில்லி பாஜக துணைத் தலைவராக கபில் மிஸ்ராவை நியமித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

DIN

தில்லி பாஜக துணைத் தலைவராக கபில் மிஸ்ராவை நியமித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து பாஜக தில்லி தலைவர் வீரேந்திர சச்தேவா வெளியிட்ட அறிக்கையில், கட்சியின் தில்லி பிரிவு துணைத் தலைவராக கபில் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தில்லி முன்னாள் அமைச்சரான கபில் மிஸ்ரா 2019 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கும், 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கும் பாஜக தயாராகி வருகிறது. 

இதையொட்டி இந்த மாத தொடக்கத்தில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மத்தியப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக அறிவித்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு! அரசாணை வெளியீடு!

பிரிட்டனின் அரச நெறிமுறைகளை மீறினாரா அதிபர் டிரம்ப்?

தேர்தல் ஆணையம் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறது; ஆனால், பதில் எங்கே? - காங்கிரஸ் கேள்வி

விஜய்யின் சுற்றுப் பயண பிரச்னையிலேயே குட்டிக்கரணமிடும் தவெக: அண்ணாமலை விமர்சனம்

புரட்டாசி மாதப் பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT