இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

DIN

ஐம்மு - காஷ்மீரின் அம்ரோஹி பகுதியில் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பயங்கராவதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டது. 

இது குறித்து காஷ்மீர் மண்டல காவல்துறை அதிகாரப்பூர்வ ட்விட்டரில் கூறியது, பாதுகாப்புப் படை மற்றும் குப்வாரா காவல்துறை கூட்டு நடவடிக்கையில் தங்தார் செக்டார் அம்ரோஹி பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் ஒரு பயங்கரவாதியை சுட்டுக்கொல்லப்பட்டதன் மூலம் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. 

மேலும் பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைபற்றப்பட்டன.

தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதேபோல், ரஜோரி மாவட்டத்தில் உள்ள பரியாமா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

மற்ற பயங்கரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருவதாக ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெளிநாடு சென்ற நடிகர் விஜய்!

50 தொகுதிகளில்கூட காங்கிரஸ் வெற்றி பெறாது:மோடி பேச்சு

ஆந்திரம்: மினி வேனிலிருந்து சாலையில் சிதறிய ரூ.7 கோடி பறிமுதல்

ஒய்.எஸ்.ஆர். நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை!

ஜான்வியின் சூப்பர் ஹீரோ யார் தெரியுமா?

SCROLL FOR NEXT