இந்தியா

உச்சநீதிமன்றத்தில் மணிப்பூர் டிஜிபி ஆஜர்

மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அம்மாநில டிஜிபி ராஜிவ்சிங் நேரில் ஆஜரானார்.  

DIN

மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அம்மாநில டிஜிபி ராஜிவ்சிங் நேரில் ஆஜரானார். 

இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்த நிலையில் அவர் இன்று ஆஜரானார். முன்னதாக மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு செயலிழந்துவிட்டதாக கடுமையான அதிருப்தியை உச்சநீதிமன்றம் வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கலவரம் நீடித்து வருகிறது. பழங்குடி அந்தஸ்து வழங்கக்கோரி மைதேயி சமூகத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு கூகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்த இரு சமூகத்தினரிடையேயும் மோதல் போக்கு நிடித்து வருவதால், மணிப்பூரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மைதேயி சமூகத்துக்கு எதிராகவும், மத்திய அரசை கண்டித்தும் பேசும் நபர்கள் மீது மணிப்பூரில் கடும் தாக்குதல் நடத்தப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். 

சமீபத்தில் கூகி பழங்குடியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் ஆடைகளின்றி ஊர்வலமாக அழைத்துவரப்பட்ட சம்பவமும் அரங்கேறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காமராஜா் சந்தையில் பாதையில் உள்ள கடைகளை அகற்ற கோரிக்கை

கரூா் சம்பவத்தில் தவறு செய்தவா்கள் இன்னும் பாடம் கற்கவில்லை: கி.வீரமணி

கும்பகோணத்தில் இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கரூா் துயரச் சம்பவம்: சிறப்பு விசாரணைக் குழுவினா் முன்னிலையில் சேலம் தவெக மத்திய மாவட்டச் செயலா் ஆஜா்

சூடான்: துணை ராணுவ தாக்குதலில் 53 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT