இந்தியா

புதிய திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கும் ராஜஸ்தான் அரசு!

இந்திரா காந்தி ஸ்மார்ட்போன்  திட்டத்தின் கீழ் ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்கு ஸ்மார்ட் போன்களை இன்று (ஆகஸ்ட் 10) அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் வழங்கினார். 

DIN

இந்திரா காந்தி ஸ்மார்ட்போன்  திட்டத்தின் கீழ் ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்கு ஸ்மார்ட் போன்களை இன்று (ஆகஸ்ட் 10) அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிர்லா அரங்கத்தில் நடைபெற்றது. 

இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: இந்த புதிய திட்டத்தின்கீழ் இணைய வசதியுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டது என்றனர். 

இந்தத் திட்டம் தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியதாவது: அறிவே ஆற்றல் என்ற கருப்பொருளை மையமாக வைத்து  இந்த திட்டம் ராஜஸ்தான் மாநில அரசினால் தொடங்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் பெண்கள் பெரிதும் பயனடைவர். இந்த திட்டத்தில் முதல் கட்டமாக விதவைகள், பென்சன் பெறும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட உள்ளது. பெண்கள் அவர்களுக்கு பிடித்தமான ஸ்மார்ட்போன்களை தேர்ந்தெடுக்கலாம். அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக ரூ.6,800 பணம் மாநில அரசினால் செலுத்தப்படும் என்றார்.

இந்தத் திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக 40 லட்சம் பேர் பயனடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT