இந்தியா

முத்த சைகைக்கே இப்படியென்றால் மணிப்பூர் பெண்களை நினைத்துப்பாருங்கள்!

முத்த சைகைக்கே இப்படியென்றால் மணிப்பூர் பெண்களை நினைத்துப்பாருங்கள் என்று மத்தியப் பிரதேச மாநில ஐஏஎஸ் அதிகாரி ஷைல்பாலா மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

DIN

முத்த சைகைக்கே இப்படியென்றால் மணிப்பூர் பெண்களை நினைத்துப்பாருங்கள் என்று மத்தியப் பிரதேச மாநில ஐஏஎஸ் அதிகாரி ஷைல்பாலா மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் பாஜக பெண் எம்.பி.க்கள் பகுதியை நோக்கி பறக்கும் முத்த சைகையை காண்பித்ததாக ராகுல் காந்தி மீது புகாா் தெரிவித்து, அவா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக பெண் எம்.பி.க்கள் சாா்பில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் புதன்கிழமை புகார் அளிக்கப்பட்டது.

இதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரியான ஷைல்பாலா மார்ட்டின் தனது ட்விட்டர் பக்கத்தில், " மணிப்பூர் பெண்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்" என்று தெரிவித்தார். 

இவர் ராகுலு காந்திக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் எம்.பி.க்கள் கையெழுத்திட்டு மக்களவைத் தலைவருக்கு அனுப்பிய கடிதத்தின் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

மத்தியப் பிரதேச மாநில போபால் செயலகத்தில் பொது நிர்வாகத் துறையில் கூடுதல் செயலாளராக நியமிக்கப்ப்பட்டவர் ஐஏஎஸ் அதிகாரி ஷைல்பாலா மார்ட்டின். இவரின் இந்த ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது ஏன்?: தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

மாயம் செய்கிறாய்... ரச்சனா ராய்!

வானவில்... சோபிதா துலிபாலா!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வலியுறுத்தல்

இளவஞ்சி... சஞ்சி ராய்!

SCROLL FOR NEXT