இந்தியா

ஹிமாசல் கனமழை: அந்தரத்தில் தொங்கும் தண்டவாளம்!

DIN

ஹிமாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் ரயில் தண்டாவாளம் அந்தரத்தில் தொங்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.

ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவும், வெள்ளமும் ஏற்பட்டுள்ளது.

ஹிமாச்சல் தலைநகர் சிம்லாவில் உள்ள சம்மர் மலை அருகேவுள்ள குகைக் கோயிலில் இன்று அதிகாலை சரிந்து விழுந்ததில் 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், கல்கா - சிம்லா ரயில் பாதையில் சம்மர் மலை ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட நிலச்சரிவால் ரயில் தண்டவாளம் அந்தரத்தில் தொங்கியுள்ளது.

இதன் காரணமாக கந்தகாட் - சிம்லா இடையேயான ரயில் சேவை முழுமையாக நிறுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

தண்டவாளத்தை சரிசெய்யும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய பிளாக் பெல்ட் கராத்தே போட்டிக்கு தஞ்சை மண்டலத்திலிருந்து 85 போ் தோ்வு

மீன்பிடி தடைக்காலம்: உக்கடம் சந்தைக்கு மீன்வரத்து குறைவு

ஏலகிரி மலையில் காவலா் குடியிருப்புகள் அமைக்கப்படுமா?

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியா் தினம்

ரூ. 3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள்

SCROLL FOR NEXT