இந்தியா

பெண்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம்: திரெளபதி முர்மு

DIN

சுதந்திர இந்தியாவில் பெண்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம்  அளிக்கப்படுவதாக  குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார். 

76வது சுதந்திர நாள் விழா நாளை (ஆக. 14) கொண்டாடப்படவுள்ள நிலையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாடினார். 

அப்போது பேசிய அவர், நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். எல்லா இடங்களிலும் திருவிழா சூழலை காணும் போது மகிழ்ச்சி அளிக்கிறது.

சுதந்திரநாளையொட்டி முகம் தெரிந்த, தெரியாத சுதந்திர போராட்ட வீரர், வீராங்கனைகளுக்கு நாட்டு மக்களுடன் சேர்ந்து நானும் மரியாதை செலுத்துகிறேன்.

பாரத மாதாவுக்காக பெண்களும் தனது உயிரை பரிசாக அளித்துள்ளனர். மாதாங்கினி ஹசாரா, கனக்லதா பாருஹ் போன்றோர் தனது வாழ்க்கையை சுதந்திர போராட்டத்துக்காக அர்ப்பணித்தவர்கள். தேசத்தந்தை காந்தி மேற்கொண்ட சத்தியாகிரகத்தின் எல்லா கடினமான சூழலிலும் கஸ்தூரிபாய் உடன் இருந்தார். 

நமது நாட்டில் பெண்களின் பொருளாதார தன்னிறைவுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பொருளாதார ரீதியாக வலிமை பெறுவது பெண்களை குடும்பத்திலும் சமூகத்திலும் நிலைநிறுத்தும். 

எனது சகோதரிகளும் பெண்களும் தைரியத்துடன் வாழ்க்கையின் சவால்களை கடக்க வேண்டும். நமது சுதந்திரப் போராட்டத்தின் லட்சியங்களில் பெண்களின் வளர்ச்சியும் இருந்தது.

நாம் தனி நபர்கள் அல்ல மிகப்பெரிய சமூகத்தின் ஒரு அங்கம் என்பதை சுதந்திர நாள் நமக்கு நினைவூட்டுகிறது.  

இந்த சமூகம் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் குடிமக்களைக் கொண்டது. சாதி, மதம், மொழி, மாநிலம் ஆகியவற்றை கடந்து நமக்கெல்லாம் ஒரு அடையாளம் உள்ளது. 

காந்தி உள்ளிட்டோர் நாட்டின் ஆன்மாவை மீண்டும் எழுப்பியதோடு நமது மிகப்பெரிய நாகரிகத்தை எடுத்துரைத்தனர் எனக் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையிலிருந்து வெளியே வந்தார் கேஜரிவால்!

சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த காலின் முன்ரோ; காரணம் என்ன?

சிஎஸ்கே பந்துவீச்சு; அணியில் மீண்டும் ரச்சின் ரவீந்திரா!

கண்டாங்கி சேலையில் லாஸ்லியா!

சூரிய அஸ்தமனம் காணும் நிலவு!

SCROLL FOR NEXT