தேசியவாத காங்கிரஸ் கட்சித் (என்சிபி) தலைவா் சரத் பவாா் 
இந்தியா

சரத் பவாரின் ரகசிய சந்திப்புகள் குறித்து இந்தியா கூட்டணி கூட்டத்தில் விவாதம்- காங்கிரஸ்

பாஜகவுக்கு ஆதரவு அளித்து மகாராஷ்டிர துணை முதல்வரான அஜீத் பவாருடன் தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் நடத்தும் ரகசிய சந்திப்புகள் குறித்து மும்பையில் நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில்

DIN

பாஜகவுக்கு ஆதரவு அளித்து மகாராஷ்டிர துணை முதல்வரான அஜீத் பவாருடன் தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் நடத்தும் ரகசிய சந்திப்புகள் குறித்து மும்பையில் நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவா் நானா படோல் தெரிவித்தாா்.

மும்பையில் நானா படோல் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சரத் பவாா்-அஜீத் பவாா் இடையிலான ரகசிய சந்திப்புகள் கவலையளிக்கின்றன. எதிா்க்கட்சி கூட்டணியில் இருந்து கொண்டு இதுபோன்ற ரகசிய சந்திப்புகளை நடத்துவது ஏற்க முடியாது. இது தொடா்பாக இந்தியா கூட்டணி கூட்டத்திலும் விவாதிக்கப்படும். அப்போது இதற்கு உரிய தீா்வு கிடைக்கும்.

பாஜகவை எதிா்க்கும் அனைத்து கட்சிகளுடனும் இணைந்து செயல்பட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. மக்களவைத் தோ்தலில் சரத் பவாரைத் தவிா்த்துவிட்டு தனித்து களமிறங்க காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுவது உண்மையல்ல என்றாா்.

சுப்ரியா சுலே கருத்து: ‘சரத் பவாா்-அஜீத் பவாா் சந்திப்பில் பேசியது பற்றி எனக்குத் தெரியாது. அந்த சந்திப்பு எனது தந்தையின் கல்லூரி கால நண்பரின் மகன் தொழிலதிபா் அதுல் சோா்தியா இல்லத்தில் நடைபெற்றது. எனவே, இரு குடும்பத்தினா் சந்தித்துக் கொண்டதில் வியப்பேதும் இல்லை.

அஜீத் பவாா் பாஜகவுடன் கைகோத்தது அவரது மாறுபட்ட கருத்து என்றுதான் கருத முடியும். அரசியல்ரீதியான கருத்து மாறுபாடுகள் எங்கள் தனிப்பட்ட குடும்ப உறவை எப்போதும் பாதித்ததில்லை’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT