இந்தியா

ஆம் ஆத்மியை நம்ப முடியாது: காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித்

ஆம் ஆத்மியை நம்ப முடியாது என்று  காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித் தெரிவித்துள்ளார்.

DIN

ஆம் ஆத்மியை நம்ப முடியாது என்று  காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ஆம் ஆத்மி கட்சியை நம்ப முடியாது என்பதே எங்களின் நிலைப்பாடு. அவர்களின் அரசியலில் ஊழல் உள்ளது. நேர்மையற்ற அரசியலை அவர்கள் செய்கிறார்கள். பொருளாதார வளர்ச்சி பற்றி அவர்களிடம் எந்த கொள்கையும் கிடையாது. இலவசங்களை வழங்குவதில் மட்டுமே அவர்களின் கவனம் உள்ளது. அவர்கள் எப்போதும் பொய் பேசத் தயாராகவே இருக்கிறார்கள். ஏழு தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று நாங்கள் கூறவில்லை. 

ஏழு தொகுதிகளுக்கும் நாங்கள் தயார் என்று கூறினோம். கூட்டணி அமைந்ததும் யார் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது முடிவு செய்யப்படும். கட்சியை வலுப்படுத்துவதற்காகவே காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. மற்றபடி கூட்டத்தில் கூட்டணி குறித்து எதுவும் விவாதிக்கவில்லை என்றார். 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவை வலுவுடன் எதிா்கொள்வதற்காக, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 கட்சிகள் ஒன்றிணைந்து, ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. 

பாஜகவுக்கு இக்கூட்டணி கடும் போட்டியை அளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில், மக்களவைத் தோ்தலுக்கு தயாராவது, கட்சியை அமைப்புரீதியில் வலுப்படுத்துவது ஆகியவை குறித்து தில்லியைச் சோ்ந்த காங்கிரஸ் தலைவா்களுடன் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோா் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா். இக்கூட்டத்துக்கு பிறகு செய்தியாளா்களிடம் பேசிய அல்கா லம்பா, ‘தில்லியின் 7 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிட தயாராகுமாறு, எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றாா். 

அவா் வெளியிட்ட இந்த தகவல், ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ்-ஆம் ஆத்மி இடையே மீண்டும் கருத்து வேறுபாட்டுக்கு வழிவகுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6-10 வகுப்புகளுக்கு உடற்கல்வி பாட நூல்: பள்ளிக் கல்வித் துறை வெளியீடு

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் இன்று மின் நிறுத்தம்

கல்லிடைக்குறிச்சியில் குடும்ப அட்டைகளுக்கான கடைகள்மாற்றம்

களக்காட்டில் பராமரிப்பின்றி வீணாகும் கோயில் தெப்பக்குளம்

வண்ணாா்பேட்டை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT