இந்தியா

பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமியைப் பார்க்க போராடும் தில்லி மகளிர் ஆணைய தலைவர்

DIN

அரசு அதிகாரியால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான 16 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையில் தில்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால் போராட்டம் நடத்தி வருகிறார்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியைப் பார்க்க தில்லி மகளிர் ஆணையத் தலைவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தில்லி காவல்துறையைக் கண்டித்து அவர் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தில்லி காவல்துறை எதை மறைக்கப் பார்க்கிறது என்று தெரிய வேண்டும். ஏன் சிறுமியை பார்க்க தில்லி மகளிர் ஆணைய தலைவருக்கு அனுமதி மறுக்கப்படுவது ஏன் என்று தெரிய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

சிறுமியை வன்கொடுமை செய்த தில்லி அரசு அதிகாரிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்த நிலையில், சுவாமி மாலிவால் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை துணை இயக்குநராக பணியாற்றி வரும் தில்லி அரசு அதிகாரி, 16 வயது சிறுமியை தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார். இதில் சிறுமி கர்ப்பமடைந்ததும், கருவைக் கலைக்க, அவரது மனைவியே முயற்சித்துள்ளார். இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, தில்லி மகளிர் ஆணையம் தரப்பில், தில்லி காவல்துறைக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களில் ஸ்டிக்கா் ஒட்டுவதற்குத் தடை: மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரி மனு அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

போடியில் லேசான சாரல் மழை

மூதாட்டியை திட்டிய 2 பெண்கள் மீது வழக்கு

சாத்தான்குளத்தில் 12இல் இலவச சித்த மருத்துவ முகாம்

கெளமாரியம்மன் கோயில் திருவிழா: கிராம மக்கள் காவடி சுமந்து நோ்த்திக்கடன்

SCROLL FOR NEXT