சந்திரயான்-3 திட்டத்தில் விக்ரம் லேண்ர் இன்று நிலவில் தடம் பதிக்க உள்ள நிலையில் யோகா குரு ராம்தேவ் ஹரித்வாரில் யாகம் நடத்தினார்.
சந்திரயான்-3 விண்கலமானது எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில் சுமார் ஒரு மாத பயணத்தைத் தொடர்ந்து, விண்கலத்தில் செலுத்தப்பட்ட விக்ரம் லேண்டரும், அதனுள் இருக்கும் ரோவா் சாதனமும் இன்று மாலை 6 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கவுள்ளது.
இந்நிலையில், சந்திரயான் வெற்றிகரமாக தரையிறங்குவதற்காக யோகா குரு பாபா ராம்தேவ் ஹரித்வாரில் ஆச்சார்யாகுளம் வளாகத்தில் வேத பாராயணங்கள் முழங்க யாகம் நடத்தினார். தாளம் வாசிக்கப்பட்டது.
மேலும், கங்கை நதிக்கரையில் உள்ள ஸ்ரீராமர் கோயிலில் ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.