இந்தியா

கிரீஸ் நாட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

DIN

கிரீஸ் நாட்டிற்குச் சென்ற பிரதமர் மோடிக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

கடந்த 22-ம் தேதி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியாவிலிருந்து புறப்பட்டார். அங்கு அவர் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டு பல நாட்டின் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். 

அதன்பின்னர், தென்னாப்பிரிக்காவிலிருந்து ஒருநாள் அரசு முறை பயணமாக இன்று கிரீஸ் வந்துள்ளார். ஏதென்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு கிரீஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஜெராபெட்ரிட்டிஸ் உற்சாக வரவேற்பு அளித்தார். கடந்த 40 ஆண்டுகளில் கிரீஸ் நாட்டுக்கு பிரதமர் மோடி செல்வதே இதுவே முதல்முறையாகும். 

எதென்ஸ் நகரில் மோடியை வரவேற்க வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பதாகைகளுடன் காத்திருந்தனர். மோடியை பார்த்ததும் அவர்கள் பாரத் மாதா கி ஜெய் என கோஷமிட்டு வரவேற்றனர். தொடர்ந்து அவர் டாம்ப் எனும் இடத்தில் உள்ள போர் வீரர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். 

பின்னர், கிரீஸ் அதிபர் கத்ரீனா என்.சகெல்லபவுலோவை சந்தித்துப் பேசினார். அப்போது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

சந்திரயான்-3 வெற்றி இந்தியாவிற்கான வெற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதக்குலத்திற்குக் கிடைத்த வெற்றி. சந்திரயான்-3 திட்டத்தில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் முடிவுகள் ஒட்டுமொத்த அறிவியல் சகோரத்துவதத்திற்கும் மனிதக் குலத்திற்கும் உதவும் என்று பிரதமர் மோடி பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த இரண்டே வாரத்தில் தென்மேற்கு பருவமழை..!

கங்கனாவின் ‘எமா்ஜென்சி’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு!

சென்னையில் வெப்பத்தை தணித்த மழை..!

மெமோ எதிர்பார்க்கும்.. ஸ்ரேயா ரெட்டி!

கேஜரிவாலுக்கு சிறப்பு சலுகை: உச்சநீதிமன்ற உத்தரவை விமர்சித்த அமித் ஷா

SCROLL FOR NEXT