இந்தியா

"ஊழலின் உறைவிடமான திமுக..." நோ்மையான ஆட்சி நடத்தும் மோடி அரசு மீது வீண் பழி சுமத்துவதா? - அண்ணாமலை

DIN

சென்னை: "ஊழலின் உறைவிடமான திமுக..." ஊழலற்ற, நோ்மையான ஆட்சி நடத்தும் மோடி அரசின் மீது வீண் பழி சுமத்துவது பொது மக்களிடம் நகைக்க வைக்கும் என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை கூறினார். 

மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் நடந்துள்ள பல ஊழல்களை சிஏஜி அறிக்கையில் அம்பலப்படுத்தியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அண்ணாமலை, “ஊழலின் உறைவிடமாக திமுக திகழ்கிறது, மத்திய அரசில் 7 திட்டங்களில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அப்பட்டமாக பொய் சொல்லியிருக்கிறாா். சிஏஜி அறிக்கையை முதல்வர்  இதற்கு முன் எப்போதாவது படித்ததுண்டா என்ற கேள்வி எழுகிறது.

“சிஏஜி அறிக்கையில், நெடுஞ்சாலை அமைப்பதில் செலவு  அதிகரித்துள்ளதாக கூறியிருக்கிறதே தவிர, முறைகேடு, மோசடி என கூறவில்லை. துவாரகா விரைவுச் சாலை அமைப்பதில் செலவினங்கள் அதிகரித்துள்ளதற்கு, வடிவமைப்புத் திட்டங்களில் ஏற்பட்ட மாறுதல்தான் காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, ஊழல், முறைகேடு, மோசடி, குறிப்பிட்ட நபர்களுக்கு ஒப்பந்தம் ஒதுக்கீடு போன்ற வார்த்தைகள் எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை முதல்வர் ஸ்டாலின் விளக்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் 14 வழிச்சாலையில் 8 வழி மேம்பாலங்களாகவும், 6 வழி விரைவுச் சாலைகளாகவும் மாற்றப்பட்டுள்ளதால் செலவு அதிகரித்துள்ளது என சிஏஜி அறிக்கையே கூறுகிறது. ஊழலோ, முறைகேடோ நடந்துள்ளது என்று எங்கும் கூறப்படவில்லை.

மேலும், தமிழக கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்துவதில் திமுக அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக அவர் கூறினார்.

"மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு உதவாமல், கனிம வளங்களைத் திருடும் நபர்கள் மீது முதல்வர் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்?" 

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக முதல்வரின் குற்றம்சாட்டுக்கு, “ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முறைகேடு என்று கூறுவது, வானத்தைப் பார்த்து எச்சில் துப்புவது போல் உள்ளது. ஒரே எண்ணில் பலரது கணக்குகள் இணைக்கப்பட்டிருந்தால், அதை சரிசெய்யும் பொறுப்பு மாநில அரசுக்கும் உண்டு என்பதைக் கூட அறியாமல் முதல்வர் உள்ளாா்.

"ஒரே எண்ணில் பல கணக்குகளை இணைப்பது போன்ற தொழில்நுட்ப குறைகள் மீண்டும் நிகழாமல் தடுக்க புதிய தொழில்நுட்பத்தை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. ஆனால், ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள போலி கணக்குகளை சரி செய்ய வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு. மத்திய அரசு ஊழல் செய்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் புரிந்து கொள்ளாமல் பேசியுள்ளார்.

மேலும், 2ஜி ஊழல் தொடர்பான சிஏஜி அறிக்கையையும், அதில் திமுகவின் பங்களிப்பையும் நாட்டு மக்கள் மறந்துவிட மாட்டார்கள் என்றவர், ஊழல், முறைகேடு, மோசடி, அரசுக்கு இழப்பு என்ற அனைத்தும் வாா்த்தைகளும் இடம் பெற்றுள்ளன. 

உலக அளவில், ஊழலின் அடையாளங்களான திமுக. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் வீண் பழியை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். எனவே, சுங்கச் சாவடியில் என்ன ஊழல் நடந்திருக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டியது முதல்வரின் கடமை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை!

அன்னையர் நாள்: தலைவர்கள் வாழ்த்து!

உலக செவிலியர் நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

திருப்பதி செல்வோர் கவனத்துக்கு...முக்கிய அறிவிப்பு!

பத்ரிநாத் கோயில் நடை இன்று திறப்பு!

SCROLL FOR NEXT