இந்தியா

51,000 பேருக்கு பணி நியமன ஆணைகள்: பிரதமர் மோடி வழங்கினார்

அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் சுமார் 51,000 பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று(திங்கள்கிழமை) வழங்கினார்.

DIN

அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் சுமார் 51,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று(திங்கள்கிழமை) வழங்கினார்.

மத்திய அரசுப் பணியிடங்களில் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று மத்திய பாஜக அரசு வாக்குறுதி அளித்தது. அதன்படி, 'ரோஜ்கர் மேளா' என்ற பெயரில் வேலைவாய்ப்பு முகாம்களை இந்தியா முழுவதும் நடத்தி வருகிறது. 

இதன் கீழ் மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணியமர்த்தப்படும் சுமார் 51,000 பேருக்கு வேலைவாய்ப்புக்கான பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்வில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். 

மேலும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 'இளைஞர்கள் நாட்டுக்கு சேவை செய்ய ஆசைப்படுகிறார்கள். இன்று பணி நியமன ஆணைகளைப் பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் இந்த வேளையில் இவர்களை 'நாட்டை பாதுகாப்பவர்கள்' என்று கூறலாம்' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் 81 புதிய சுகாதார மையங்கள் தொடக்கம்!

விஜய்யின் வெற்றிக்காக பிரார்த்திக்கிறேன்! ரவி மோகன்

பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் காப்பீடு நிறுவனத்தில் பயிற்சி!

களம்காவல் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா பேட்டிங்.. நிதிஷ் குமார் ரெட்டி சேர்ப்பு!

SCROLL FOR NEXT