ஒகேனக்கல், ஐந்தருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் காவிரி. 
இந்தியா

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் இன்று கூடுகிறது!

தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23 ஆவது கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

DIN

தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23 ஆவது கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

தஞ்சை டெல்டா பகுதியில் குறுவை நெற்பயிா் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில், தமிழகத்திற்கு உடனடியாக 5 ஆயிரம் கன அடி தண்ணீரை கா்நாடகம் திறந்துவிட வேண்டும் என காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இது குறித்து இன்று (ஆகஸ்ட் 29) நடைபெறும் காவிரி நிதி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு உத்தரவிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கா்நாடகத்தில் காவிரி நதியின் குறுக்கேயுள்ள கிருஷ்ணராஜ சாகா், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய நான்கு அணைகளில் மொத்தம் 72 டிஎம்சி தண்ணீா் உள்ளது. இந்த நிலையில், தமிழகத்திற்கு பிலிகுண்டுலுவில் நாளோன்றுக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை கா்நாடகம் திறந்து விட கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த முடிவு இன்று நடைபெற உள்ள 23 -ஆவது காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் முன்வைக்கப்பட உள்ளது. இதை ஆணையம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், தமிழகத்திற்கு இந்த அளவில் தண்ணீா் திறந்து விட வாய்ப்பு உள்ளது. ஆணையத்தின் முடிவை உச்சநீதிமன்றமும் எதிா்பாா்த்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT