கோப்புப்படம் 
இந்தியா

ஜார்க்கண்டில் சாலையில் சென்றவர்கள் மீது கார் மோதல்: மூவர் பலி, 9 பேர் காயம்

ஜார்க்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டத்தில் கலாசார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீடு திரும்பியவர்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்3 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்தனர். 

DIN

ஜார்க்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டத்தில் கலாசார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீடு திரும்பியவர்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்3 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்தனர். 

மாநில தலைநகர் ராஞ்சியில் இருந்து 175 கி.மீ தொலைவில் உள்ள செயின்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள பரோன் கிராமத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு இந்த விபத்து நடந்ததாக காவல்துறை தெரிவித்தனர். 

ஷ்ராவன மாதத்தின் கடைசி திங்கள்கிழமையை முன்னிட்டு கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலாசார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். 

இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரிஷவ் கார்க் கூறுகையில், 

இந்த விபத்து சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மேதிநிறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கார் இடித்து இறந்தவர்கள் சௌராசியா (34), ரோஹித் சௌராசியா (45) மற்றும் மது மேத்தா (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக விபத்து ஏற்படுத்திய சாரதி என்பவர் காருடன் தப்பிச் சென்றுள்ளார். அவரைப் பிடிக்கத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT