இந்தியா

ஜெகந்நாதர் கோயிலில் குடியரசுத் தலைவர் முர்மு வழிபாடு!

சத்தீஸ்கருக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ராய்பூரில் உள்ள ஜெகந்நாதர் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார். 

DIN

சத்தீஸ்கருக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ராய்பூரில் உள்ள ஜெகந்நாதர் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார். 

மாநிலத் தலைநகர் ராய்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தா விமான நிலையத்திற்கு சிறப்பு விமானம் மூலம் முர்மு இன்று காலை 11 மணிக்கு வந்தடைந்தார். அவரை ஆளுநர் பிஸ்பபூசன் ஹரிச்சந்தன், முதல்வர் பூபேஷ் பாகேல், ராய்பூர் ஐஜாஸ் தேபர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் அவரை வரவேற்றனர். 

பின்னர் காயத்ரி நகர்ப் பகுதியில் உள்ள ஜெகந்நாதர் கோயிலுக்குச் சென்றார். அங்கு ஜெகந்நாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்ரா ஆகியோரை முர்மு வழிபாடு செய்தார். அவருடன் ஆளுநர், முதல்வர் முர்முவின் மகள் இதிஸ்ரீ முர்மு ஆகியோர் பங்கேற்றனர். 

ஒடிசாவில் உள்ளது போன்றே 2003-ல் ஜெகந்நாதர் கோயில் கட்டப்பட்டது. இங்கு ஒடிசாவில் இருந்து வேப்ப மரத்தால் செய்யப்பட்ட சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. 

வெள்ளிக்கிழமை பிலாஸ்பூர் மாவட்டத்தின் ரத்தன்பூர் நகரில் உள்ள மகாமாயா கோவிலுக்குச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

SCROLL FOR NEXT