மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்) 
இந்தியா

உத்தவ் தாக்கரே விருந்தில் பங்கேற்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

மகாராஷ்டிரத்தில் (உத்தவ் பிரிவு) சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அளிக்கும் விருந்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ளவுள்ளார். 

DIN


மகாராஷ்டிரத்தில் (உத்தவ் பிரிவு) சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அளிக்கும் விருந்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ளவுள்ளார். 

எதிா்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் (இந்திய தேசிய வளா்ச்சிக் கூட்டணி) 2 நாள் ஆலோசனைக் கூட்டம், மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் வியாழக்கிழமை (ஆக. 31) தொடங்கவுள்ளது.

இக்கூட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டு பிரசார வியூகத்தை வகுப்பதோடு, கூட்டணியின் இலச்சினை மற்றும் ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 28 கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளன. இந்தக் கூட்டத்தில் 28 கட்சிகளைச் சோ்ந்த 63 போ் பங்கேற்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் தெரிவித்துள்ளாா்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மும்பை புறப்பட்டார். இன்று நடைபெறும் முதல் நாள் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, மாலையில் உத்தவ் தாக்கரே அளிக்கும் இரவு உணவு விருந்தில் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ளவுள்ளார்.  நாளைய நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு நாளை இரவு மு.க. ஸ்டாலின் சென்னை திரும்புகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

உங்கள் வாக்குரிமையைத் தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? தீவிர திருத்தத்தை எதிர்கொள்ள...

விபத்தில் சிக்கிய சரக்கு விமானம்! 7 பேர் பலி, 11 பேர் காயம்! | America

தென்னாப்பிரிக்க டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு! மீண்டும் அணிக்குத் திரும்பிய ரிஷப் பந்த்!

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT