கோப்புப்படம் 
இந்தியா

பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த நவீன் பட்நாயக்!

மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

DIN

மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமர் மோடிக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் சமீபத்தில் நடைபெற்றன.

மிசோரம் தவிர மற்ற நான்கு மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று (டிச.3) அறிவிக்கப்பட்டன. அதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றது.

இதனையடுத்து ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததாக ஒடிசா மாநில முதல்வர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

அதே சமயத்தில் இந்த தேர்தல் வெற்றிகள் ஒடிசா மாநிலத்தில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று பிஜு ஜனதா தளம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

பிஜு ஜனதா தளம் கட்சியின் எம்.பி. அமர் பட்நாயக், “எந்த மாநிலத்திலும் நவீன் பட்நாயக் அளவுக்கு ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை. எனவே சமீபத்தில் வெளியான தேர்தல் முடிவுகள் நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா மாநிலத்தில் சிறு தாக்கத்தைக் கூட ஏற்படுத்தாது.” என்று கூறியுள்ளார்.

147 தொகுதிகளைக் கொண்ட ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு 2000-ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பிஜு ஜனதா தளம் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவின் கொலை வழக்கு: தந்தை, மகனுக்கு 13 நாள் சிறை!

தொடர் விடுமுறை: ஆம்னி பேருந்து, விமானங்களில் கட்டணம் பல மடங்கு அதிகரிப்பு!

ரூ.3,000 -க்கு 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்! நாளைமுதல் அமல்!

பதவி உயர்வு காத்திருக்கிறது இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பெரியாா் பல்கலை.யில் உளவியல் துறை பயிலரங்கம்

SCROLL FOR NEXT