இந்தியா

தண்ணீர்த் தொட்டியை சுத்தப்படுத்தும்போது தவறி விழுந்து இளைஞர் பலி

தண்ணீர்த் தொட்டியை சுத்தப்படுத்தும்போது  மாடியிலிருந்து கால் தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

தாணே : தண்ணீர்த் தொட்டியை சுத்தப்படுத்தும்போது  மாடியிலிருந்து கால் தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரத்தின் ராய்கட் மாவட்டத்தில் பன்வேல் பகுதியில் உள்ள ஒரு மூன்றடுக்குமாடிக் கட்டடத்தின் மொட்டைமாடியில் அமைந்துள்ள தண்ணீர்த் தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில், மாருதி ஜோமா குட் என்ற 28 வயதான இளைஞர் ஈடுபட்டிருந்தார்.

இந்தநிலையில், எதிர்பாராதவிதமாக கால் தவறி, அவர் மாடியிலிருந்து கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. அதில் அவர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இன்று(டிச.9) காலை 11.45 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.  

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், இறந்த இளைஞரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்த இளைஞரின் மனைவி அளித்த புகாரின்பேரில், தூய்மைப்பணியில் ஈடுபட்டிருந்த இளைஞருக்கு முறையான பாதுகாப்புக் கவசங்கள் வழங்காத ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநாட்டுத் திடலில் குவிய ஆரம்பித்த தவெக தொண்டர்கள்! கழுகுப்பார்வை காட்சிகள்! | Vijay | Madurai

"நீ அரியணை ஏறும் நாள் வரும்": ஷோபா சந்திரசேகர் வாழ்த்து!

இந்தியாவுக்கு 5% தள்ளுபடியில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும்: ரஷியா அறிவிப்பு

தொடர்ந்து 4-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!!

தங்கம் விலை அதிரடியாக உயர்வு! எவ்வளவு?

SCROLL FOR NEXT