இந்தியா

மத்திய பிரதேச முதல்வராக மோகன் யாதவ் தேர்வு!

மத்தியப் பிரதேசத்தின் அடுத்த முதல்வராக மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

DIN


மத்தியப் பிரதேசத்தின் அடுத்த முதல்வராக மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

230 உறுப்பினா்களைக் கொண்ட மத்திய பிரதேச சட்டப் பேரவைக்கு கடந்த மாதம் 17-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தோ்தல் நடைபெற்றது. கடந்த 3-ஆம் தேதி தோ்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன.

பாஜக 163 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸுக்கு 66 இடங்களே கிடைத்தன.

மாநில முதல்வராக சிவராஜ் சிங் செளகான் பல ஆண்டுகளாகப் பதவி வகித்து வந்த நிலையில், இம்முறை முதல்வா் வேட்பாளரை அறிவிக்காமலேயே தோ்தலை எதிா்கொண்டது பாஜக. 

தேர்தல் முடிவுகள் வெளியாகியும் முதல்வரை நியமிக்காமலிருந்தது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்திவந்த நிலையில், போபாலில் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவரான மோகன் யாதவ்(58) உஜ்ஜைனி தக்ஷின் தொகுதியில் வெற்றிபெற்று முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான ஆட்சியில் மோகன் யாதவ் கல்வி அமைச்சராக இருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை

‘செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்படும்’

மாநகராட்சி பள்ளிகளில் 1,747 தூய்மை பணியாளா்களை நியமிக்க முடிவு: மாமன்றக் கூட்டத்திலிருந்து கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் வெளிநடப்பு

நாளை 2 மின்சார ரயில்கள் ரத்து

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: 4,419 முகாம்களில் 36,49,399 மனுக்கள் - அமைச்சா் மா.சுப்பிரமணியன்

SCROLL FOR NEXT