இந்தியா

பிரான்சின் செர்ஜியில் திருவள்ளுவர் சிலை; நமது கலாசாரப் பிணைப்புகளுக்கு அழகான சான்று: மோடி பெருமிதம்

DIN

பிரான்சின் செர்ஜியில் உள்ள திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டுள்ளது நமது கலாசாரப் பிணைப்புகளுக்கு அழகான ஒரு சான்றாகும் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் பிரான்ஸ் பயணம் மேற்கொணடிருந்த பிரதமர் நரேந்திர மோடி, பாரீஸ் நகரில் இந்திய வம்சாவளியினரிடையே பேசுகையில், பிரான்சில் இந்தியா சார்பில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என தெரிவித்தார்.

இந்த நிலையில், பிரான்சின் செர்ஜி நகரில், பார்க் பிரான்ஸ்வா மித்தேரான் என்ற இடத்தில் திருவள்ளுவரின் முழுதிருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், பிரான்சின் செர்ஜி நகரில் திருவள்ளுவரின் சிலை புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்,பிரான்சின் செர்ஜியில் உள்ள திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டுள்ளது நமது கலாசாரப் பிணைப்புகளுக்கு அழகான ஒரு சான்றாகும்.

திருவள்ளுவர் ஞானம் மற்றும் அறிவின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறார். 

அவரது எழுத்துகள் உலகம் முழுவதும் உள்ள லட்சக் கணக்கானவர்களை ஊக்குவிக்கின்றன என்று மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில் எஸ்.பி., ஆய்வு

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 போ் காயம்

மூதாட்டி கொலை: இளைஞா் கைது

தெலுங்கானாவில் இருந்து ரயில் மூலம் பழனிக்கு வந்து சோ்ந்த உர மூட்டைகள்

நரிக்குடி அருகே கிடா முட்டுப் போட்டி

SCROLL FOR NEXT