கோப்புப் படம். 
இந்தியா

மகாராஷ்டிரத்தில் 10 மாதங்களில் 2,366 விவசாயிகள் தற்கொலை!

மகாராஷ்டிரத்தில் இந்தாண்டு 10 மாதங்களில் 2,336 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அமைச்சர் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

DIN

மகாராஷ்டிரத்தில் இந்தாண்டு 10 மாதங்களில் 2,336 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் துறை அமைச்சர் அனில் பைதாஸ் பாட்டீல் மாநிலங்களவையில் தெரிவித்தார். 

அமராவதி வருவாய் கோட்டத்தில் அதிகபட்சமாக 951 பேர் உயிரிழந்துள்ளனர் என்று காங்கிரஸ் உறுப்பினர் குணால் பாட்டீல் கேட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அமைச்சர் தெரிவித்தார். 

மாநிலத்தில் இந்தாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை 2,366 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக மகாராஷ்டிர அரசுக்கு அறிக்கை வந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 

அறிக்கையின்படி, அமராவதி வருவாய் கோட்டத்தில் 951 விவசாயிகளும், சத்ரபதி சம்பாஜிநகர் கோட்டத்தில் 877, நாக்பூர் கோட்டத்தில் 257, நாசிக் கோட்டத்தில் 254, புணே கோட்டத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர். 

தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் குடும்பத்துக்கு மாநில அரசு ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலோரம்... ரகுல் பிரீத் சிங்!

சமாளிப்புகளைவிட ஆடையின் விலை அதிகம்... யாஷிகா ஆனந்த்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியா ‘ஏ’ அணி! கேப்டன் திலக்; துணை கேப்டன் ருதுராஜ்!

இரவு 10 மணி வரை 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

2014 வாகா தாக்குதல்: 300 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 3 குற்றவாளிகளும் விடுவிப்பு?

SCROLL FOR NEXT