இந்தியா

மோடிக்கு உதவிய செய்யறிவு தொழில்நுட்பம்!

வாராணசியில் காசி - தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழர்களிடம் பேசுவதற்கு பிரதமர் மோடி செய்யறிவு தொழிழ்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார். 

DIN

வாராணசியில் காசி - தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழர்களிடம் பேசுவதற்கு பிரதமர் மோடி செய்யறிவு தொழிழ்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார். 

கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த நிகழ்வில் பேசிய பிரதமர், தமிழ் நாட்டிலிருந்து வந்திருக்கும் பங்கேற்பாளர்களை செய்யறிவு தொழில்நுட்ப ஹெட்போன்களை பயன்படுத்துமாறு கூறினார்.

அந்த ஹெட்போன்களில் பிரதமர் மோடி ஹிந்தியில் பேசும்போது உடனடியாக தமிழில் மொழி பெயர்த்து மற்றொரு குரல் தமிழில் தகவல்களைத் தெரிவிக்கும். இதன்மூலம் எந்த இடைவெளியுமின்றி பிரதமர் பேசுவது உடனுக்குடன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு புரிந்து கொள்ள வசதியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வசதிமூலம் மோடி தமிழ்நாட்டின் பங்கேற்பாளர்களிடம் பேசியுள்ளார். காசி - தமிழ் சங்கமம் கடந்த டிசம்பர் 17 துங்கி இந்த மாத இறுதிவரை நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து 1400க்கும் அதிகமான பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். 

இந்த காசி - தமிழ் சங்கமத்தில் இலக்கியங்கள், கல்வெட்டுகள், தத்துவம், ஆன்மீகம், இசை, நடனம், நாடகம், யோகா மற்றும் ஆயுர்வேதம் தொடர்பான உரைகள் நடைபெறவுள்ளன. மேலும் வர்த்தகம், அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்குகளும் நடைபெற்றவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உலகளவில் 3ஆம் இடத்தில் இந்தியா: ஜெ.பி.நட்டா

மெல்ல விடைகொடு மனமே.. அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பிறகு காலி செய்தாா் டி.ஒய்.சந்திரசூட்!

போக்ஸோவில் ஆசிரியா் கைது

வழிப்பறி: 3 போ் கைது

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

SCROLL FOR NEXT