இந்தியா

ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

2024-ஆம் ஆண்டு ஹஜ் பயணம் செல்பவர்கள் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

DIN

புதுதில்லி: 2024-ஆம் ஆண்டு ஹஜ் பயணம் செல்பவர்கள் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

செளதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு அடுத்தாண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விரும்பும் இஸ்லாமியர்கள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாக மத்திய சிறுபான்மைத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், அதிகளவிலான இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவதால் விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் இந்திய ஹஜ் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது.

இதையடுத்து ஹஜ் பயணம் செய்பவர்கள் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசத்தை ஜனவரி 15 வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

அணியிழையாள் ஆழி இழைத்தாளே!

SCROLL FOR NEXT