கோப்புப்படம் 
இந்தியா

இந்தியா ஹிந்தியின் பூமியல்ல: நிதீஷ்குமாரின் கருத்துக்குக் கண்டனம்!

இந்தியாவில் மொழியியல் பன்முகத்தன்மையை மதிக்குமாறு பிகார் முதல்வர் நீதிஷ் குமாரை ஆன்மிகத் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தியுள்ளார். 

DIN


இந்தியாவில் மொழியியல் பன்முகத்தன்மையை மதிக்குமாறு பிகார் முதல்வர் நீதிஷ் குமாரை ஆன்மிகத் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தியுள்ளார்.

ஆன்மிகத் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ், அரசியல் சந்திப்பின்போது ஹிந்தி மொழியைத் தேசிய மொழியாக வலியுறுத்தும் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் மொழி பெயர்ப்பு கோரிக்கையில் நிதானத்தை இழந்துள்ளார் என்றார்.

எக்ஸ் தளத்தில் சத்துகுரு வெளியிட்ட பதிவில், 

இந்தியா என்பது இமயமலைக்கும் இந்து சாகராவிற்கும் இடையில் உள்ள நிலம்(இந்துக்களின் நிலம்) ஹிந்தி மொழியின் நிலமல்ல.

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படுவது இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் சம அந்தஸ்து இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது. இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 

சொந்த மொழி, இலக்கியம் மற்றும் கலாசாரத்துடன் தொடர்புடைய பல மாநிலங்கள் இருப்பதால் இதுபோன்ற வெற்று அறிக்கைகளைத் தவிர்க்குமாறு அவர் கோரியுள்ளார். 

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற "இந்தியா" கூட்டத்தில் நிதிஷ் குமார் ஹிந்தியில் ஆற்றிய உரையைப் புரிந்துகொள்ள முடியாமல், திமுக தலைவர் டி.ஆர்.பாலு மொழிபெயர்ப்புக்குச் சைகையைக் காட்டியதால் அங்கு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணங்கள்... வண்ணங்கள்...

வரப்பெற்றோம் (03.11.2025)

கனடாவின் தற்காலிக விசா ரத்து? 74% இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

SCROLL FOR NEXT