தொடர் கொலையாளிக்கு 2 நாள் பரோல்: மகளின் போராட்டத்துக்கு வெற்றி
தொடர் கொலையாளி ஜெயநந்தன், அவரது புத்தகத்தை வெளியிடுவதற்கு இரண்டு நாள்கள் காவலுடன் பரோல் வழங்கி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில், தொடர் கொலையாளி என்று அறியப்படும் ஜெயநந்தன், அவரது புத்தகத்தை வெளியிடுவதற்காக இரண்டு நாள்கள் காவலுடன் பரோல் வழங்கி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனது தந்தை எழுதிய புத்தகத்தை வெளியிட பல்வேறு முயற்சிகளை எடுத்து, தந்தையும் அதில் பங்கேற்க வேண்டும் என்று போராடிய அவரது மகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
முதலில், இந்த நபருக்கு பரோல் வழங்க சிறைத்துறை அதிகாரிகள் மறுத்துவிட்ட நிலையில், நீதிமன்றம் இதில் தலையிட்டு, சிறைத்துறை விதிகளை தளர்த்தி பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க | கிறிஸ்துமஸ் அன்று சென்னையில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன்
கொலையாளி ஜெயநந்தன் (56) ஆயுள் தண்டனை கைது. கேரளத்தின் திரிசூர் - எர்ணாகுளம் பகுதிகளில் 5 கொலைகளில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருவனந்தபுரம் மத்திய சிறையிலிருந்து தப்பியோடியவர். செப்டம்பர் மாதம் மீண்டும் கைது செய்யப்பட்டார். அதற்கு முன்பும் கன்னூர் சிறையிலிருந்து தப்பியோடியிருக்கிறார்.
இந்த நிலையில், ஒன்பதாம் வகுப்பு மட்டுமே ஜெயநந்தன் எழுதிய புத்தகத்தை வெளியிடும் விழாவில், அவர் பங்கேற்க வேண்டும் என மகள் விரும்பினால். இதற்காக, இவரது மனைவி தரப்பில் பரோல் கேட்டு நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இதனை குற்றவாளியின் மகளே நீதிமன்றத்தில் முன் நின்று வாதாடி பரோல் பெற்றுள்ளார்.
பரோல் வழங்கி பிறப்பித்த உத்தரவில், மகள் மற்றும் மனைவியின் முயற்சிக்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. புத்தக வெளியீட்டு விழாவில் தந்தை பங்கேற்க வேண்டும் என மகள் விரும்புகிறாள். நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சரியாக பின்பற்றினால், ஜெயநந்தனுக்கு பரோல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் தந்தைதான் கதாநாயகன் போன்றவர் எனறும் பரோல் உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 17 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஜெயநந்தன் சிறையிலேயே புத்தகம் எழுதியிருப்பதையும் நீதிபதி குறிப்பெடுத்துக்கொண்டார்.
புலரி விரியும் முன்பே என்று பெயரிட்டிருக்கும் இந்த புத்தகம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இதில் வரும் லாபம் அனைத்தும் ஏழைக் குழந்தைகளுக்காக செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.