கோப்புப் படம் 
இந்தியா

புலியின் தாக்குதலுக்குப் பலியானவர்கள் இத்தனை பேரா? : அரசு அளிக்கும் தகவல்

புலிகளின் தாக்குதலால் பலியானவர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

DIN

புது தில்லி: நாடு  முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் புலியின் தாக்குதலால் உயிரிழந்தவர்கள் 302 பேர் என அரசு தெரிவித்துள்ளது. இதில் 55 சதவிகிதம் பலி மகாராஷ்டிர மாநிலத்தில் நிகழ்ந்துள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

மத்திய அரசு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ.29.57 கோடி  வழங்கியுள்ளது.

2022 ஆம் ஆண்டு 112 பேரும் 2021-ல் 59 பேரும் 2020-ல் 51 பேரும், 2019 மற்ற்ம் 2018-களில் முறையே 49 மற்றும் 31 பேரும் பலியாகியதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

மகாராஷ்டிராவில் மட்டும் 170 பேர் புலி தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிகார் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2018 கணக்கெடுப்பின்படி 2,967 ஆக இருந்தது, 2022-ல் 3,682 ஆக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 6 சதவிகித உயர்வு ஏற்பட்டுள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் 785 புலிகளும், கர்நாடகத்தில் 563 புலிகளும், உத்தரப் பிரதேசத்தில் 560 மற்றும் மகாராஷ்டிரத்தில் 444 புலிகள் உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT