பாதிப்புக்குள்ளான தண்டவாளம் | (ANI Twitter) 
இந்தியா

தண்டவாளம் வெடிவைத்துத் தகர்ப்பு, 13 ரயில்கள் ரத்து! 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ரயில் தண்டவாளத்தை வெடிவைத்துத் தகர்த்ததால் 13 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

DIN

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தை மர்ம நபர்கள் வெடிவைத்துத் தகர்த்ததில் 2 முதல் 3 மீட்டர் அளவிலான தண்டவாளம் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை இரவு, மகாஹாதேவ்சல் மற்றும் போசோய்டா ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ராஞ்சியிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக காவல் கண்காணிப்பாளர் அசுடோஷ் சேகர் தெரிவித்துள்ளார். மாவோயிஸ்டுகளால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும், ரயில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் அதிகாலையிலிருந்து நடைபெற்று வருவதாகவும் அசுடோஷ் தெரிவித்துள்ளார். 

பயணிகளின் பாதுகாப்பு கருதி அந்த வழியாகச் செல்லும் 13 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள்! இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

டிரம்ப் வரி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு!

ஆபாச படம்: நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப் பதிவு!

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்!

ரிலையன்ஸில் இணைந்த முன்னாள் அமலாக்கத்துறை அதிகாரி! இரு முதல்வர்களைக் கைது செய்தவர்!

SCROLL FOR NEXT