கோப்புப்படம் 
இந்தியா

இந்திய ரிசர்வ் வங்கிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!

இந்திய ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பிய நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

DIN

இந்திய ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பிய நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகாராஷ்டிரத்தில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மிரட்டல் விடுக்கக்கூடிய வகையில் ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில், “ரிசர்வ் வங்கி அலுவலகம், ஹெச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், “இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் ராஜிநாமா செய்ய வேண்டும்” எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதே போல மும்பையில் பல்வேறு இடங்களில் மொத்தம் 11 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால், காவல்துறையினர் அந்த இடங்கள் அனைத்திற்கும் உடனடியாக சென்று சோதனையிட்டனர்.

ஆனால் அந்த சோதனைகளில் வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த மிரட்டல் மின்னஞ்சல் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற விண்கலனில் என்ஜின் கோளாறு! 5,000 கி. சரக்குடன் சுற்றுப்பாதையில் சிக்கியது!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி நீக்கம்!

SCROLL FOR NEXT