மனோஜ் ஜரங்கே (கோப்புப்படம்) 
இந்தியா

மும்பையை நோக்கி பத்து லட்சம் வாகனங்கள் படையெடுக்கும்: மனோஜ் ஜரங்கே

மராத்தா சமூக இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் ஜனவரி 20-ம் தேதி மும்பையில் உண்ணாவிரதம் தொடங்க உள்ளதாக மனோஜ் ஜரங்கே தெரிவித்துள்ளார்.

DIN

ஜனவரி 20-ல் மும்பையை நோக்கி பத்துலட்சம் வாகனங்கள் படையெடுக்கும் என்று மராத்தா மனோஜ் ஜரங்கே சமூக இட ஒதுக்கீட்டுக்காக போராடி வரும் மனோஜ் ஜரங்கே தெரிவித்தார்.

ஜனவரி 20-ஆம் தேதி போராட்டக்காரர்களுக்கு தேவைப்படும் பொருட்களுடன் சுமார் 10 லட்சம் வாகனங்கள் மும்பையை நோக்கி வரும் என்று அவர் கூறியுள்ளார்.

கல்வி மற்றும் அரசுப் பணிகளில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி, மகாராஷ்டிரத்தின் ஜல்னா மாவட்டம் அந்தா்வாலி சாரதி கிராமத்தில் மனோஜ் ஜரங்கே என்ற மராத்தா சமூக தலைவா் கடந்த நவம்பர் மாதம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். 

தற்போது மீண்டும் அக்கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 20-ம் தேதி முதல் மும்பையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஜனவரி 20-ம் தேதி மராத்தா சமூக போராட்டக்காரர்களுக்கு தேவையான பொருட்களுடன் சுமார் பத்து லட்சம் வாகனங்கள் மும்பையை நோக்கி வரும். அருகிலுள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஜல்னா மாவட்டத்தின் அந்தர்வாலி சாரதி கிராமத்திற்கு போராட்டக்காரர்கள் வருகை தருவார்கள். அங்கிருந்து மும்பை நோக்கி நடக்க ஆரம்பிப்போம்.

மராத்தா சமூக மக்கள் தனித்தனி குழுக்களாக மும்பைக்கு வருவார்கள். ஒவ்வொரு குழுவிலும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் மக்கள் இருப்பார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன மேகம்... பாப்பியா சஹானா!

ட்வின்ஸ்... ஆஷிகா ரங்கநாத்!

கோவை பாலியல் வன்கொடுமை: இன்றும் நாளையும் பாஜக ஆர்ப்பாட்டம்! - நயினார் நாகேந்திரன்

பூ அல்ல... நான்... தனிஷ்க் திவாரி!

எப்போதும் உள்ளூர்க்காரி... அபர்ணா தீட்சித்!

SCROLL FOR NEXT