தில்லி பனிமூட்டம் 
இந்தியா

தில்லி பனிமூட்டம்: 110 விமானங்கள் தாமதம்

கடுமையான பனிமூட்டம் காரணமாக, புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

DIN


புது தில்லி: கடுமையான பனிமூட்டம் காரணமாக, புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

கடுமையான பனிமூட்டம் காரணமாக, புது தில்லி விமான நிலையத்திலிருந்து இன்று காலை முதல் பல்வேறு இடங்களுக்குப் புறப்பட வேண்டிய மற்றும் வரவேண்டிய 110 விமானங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானங்கள் புறப்படும் நேரம் குறித்து, பயணிகள் அந்தந்த விமான சேவை நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு கேட்டறியவும் அறிவுறுத்தப்பட்டுளள்து.

மேலும், தில்லி ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் 25-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 3 நாள்களுக்கு கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்லிமலையில் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஆடிப்பெருக்கு: பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் நீராட அனுமதி பரிசல் போட்டிக்குத் தடை

தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 2 சிறுவா்கள் கைது

ஸ்பெயினிடமிருந்து 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானத்தை பெற்றது இந்தியா!

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT