முகப்பு
கோப்பு
இந்தியா

புதிதாக 702 பேருக்கு கரோனா தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியா

புதிதாக 702 பேருக்கு கரோனா தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:32 PM
கோப்பு
பகிர்:

புது தில்லி: ஒரே நாளில் புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 702 ஆக இந்தியாவில் பதிவாகியுள்ளது. இவற்றுடன் சேர்த்து 4,097 பேருக்கு கரோனா செயல்பாட்டில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரத்தில் இருவரும் கர்நாடகம், கேரளம், மேற்கு வங்கம் மற்றும் புது தில்லியில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக டிச.22 அன்று நாட்டில் 752 பேருக்கு நோய்த் தொற்று புதிதாக உறுதி செய்யப்பட்டது. 

டிச.5 வரை இரண்டு இலக்கத்தில் இருந்த எண்ணிக்கை அதன் பிறகு புதிய வகை தொற்று மற்றும் வானிலை மாற்றத்தால் அதிகரித்து வருகிறது.

லட்சக்கணக்கில் தொற்று பரவிருந்த 2020-ம் ஆண்டு முதல் இதுவரை இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 4.5 கோடி பேர் எனவும் இதிலிருந்து மீள்பவர்களின் சதவிகிதம் 98.81 ஆக உள்ளதாகவும் மத்திய அரசின் இணையதளம் தெரிவிக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →