கோப்புப்படம். 
இந்தியா

ஒடிசாவில் 3 ஆண்கள் மீது அமிலவீச்சு!

ஒடிசாவில் 3 ஆண்கள் மீது அமிலம் வீசி தாக்குதல் நடத்திய நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

DIN

ஒடிசா மாநிலம் புல்பானியில் மூன்று நபர் மீது அமிலம் வீசி தாக்குதல் நடத்திய நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

சூரஜ் மற்றும் அவரது நண்பர் பிரமோத் மீது பிரமோத் சாஹு என்பவர் அமிலம் வீசி தாக்குதல் நடத்தியபோது அதைத் தடுக்க வந்த சந்திர மோஹன்டி என்பவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேலும், சம்பவ இடத்தில் குற்றவாளியைப் பிடித்து அடித்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். குற்றவாளியும் பலத்த காயங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பழைய பகை காரணமாக இந்தத் தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கும் நிலையில், குற்றவாளி கடத்தல் பொருள்களை அப்பகுதி இளைஞர்களுக்கு விற்றுவந்ததாகவும், அதனை சூரஜ் தட்டிக் கேட்டதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். 

குற்றவாளி ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றில் கைதாகி சமீபத்தில் சிறையிலிருந்து வந்துள்ளார் எனக் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT