இந்தியா

புத்தாண்டு கொண்டாட்டம்: நெரிசலைத் தவிர்க்க மெட்ரோ அறிவிப்பு!

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதான நெரிசலைத் தவிர்க்க மெட்ரோ நிர்வாகம் புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

DIN

புது தில்லி: தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம், டிச.31 அன்று இரவு 9 மணிக்கு மேல் ராஜீவ் செளக் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறும் வாயில் வழியாகப் பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவித்துள்ளது.

இருந்தபோதும் நிலையத்துக்குள் நுழைய விரும்புபவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

தில்லி மெட்ரோ நிர்வாகத்தின் இயக்குநர் அனுஜ் தயாள் வெளியிட்டுல்ள அறிவிப்பில் காவலர்களின் அறிவுறுத்தலின்பேரில் ராjiiவ் செளக் மெட்ரோ நிலையத்தில் இருந்து வெளியேற இரவு 9 மணிக்கு மேல் பயணிகளுக்கு அனுமதி கிடையாது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கவே இந்த முடிவு எனத் தெரிவித்துள்ளார்.

டிச.31 அன்று புறப்படும் கடைசி ரயில் வரை பயணிகள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவர்.

அதற்கேற்றாற்போல் பயணிகள் தங்கள் திட்டத்தை முடிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மற்ற ரயில்களின் அட்டவணையில் மாற்றமில்லை. 

இந்த மெட்ரோ நிலையத்துக்கு அருகில் உள்ள கனாட் பிளேஸ் பகுதியில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கனோர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கூடுவது வழக்கம்.

தில்லி காவல்துறை, கனாட் பிளேஸ் பகுதியை நோக்கி செல்லும் வாகனங்கள் 8 மணிக்கு மேல் முறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், 2500 காவலர்கள் போக்குவரத்து நெரிசலைக் கட்டுபடுத்தவும் 250 குழுக்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களைப் பரிசோதனை மேற்கொள்ளவும் பணியமர்த்தப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெங்களூரு - தூத்துக்குடி, கொல்லத்துக்கு தீபாவளி சிறப்பு ரயில்கள்!

ஒரே நேரத்தில் வாகனங்கள் பயணித்ததால் திம்பம் மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசல்

விசைத்தறி தொழிலாளா்களுக்கு 10% போனஸ்

போலியோ முகாம்: 7.82 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து!

காலாவதியான மருந்துகளை திறந்தவெளியில் கொட்டினால் நடவடிக்கை: மருந்து கட்டுப்பாட்டுத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT