இந்தியா

பம்பாய் சகோதரி லலிதா மறைவு!

பம்பாய் சகோதரிகளில் ஒருவரான லலிதா(வயது 84) உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார்.

DIN

சென்னை: பம்பாய் சகோதரிகளில் ஒருவரான லலிதா(வயது 84) உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார்.

கேரள மாநிலம் திருச்சூரில் பிறந்த சகோதரிகள் சி.சரோஜா மற்றும் சி.லலிதா. இவர்கள் சிறு வயதிலேயே மும்பைக்கு குடிபெயர்ந்த நிலையில், பிரபல கர்நாடக இசை கலைஞரும், பாடகர் ஹரிஹரனின் தந்தையுமான ஹெச்.ஏ.எஸ். மணியிடம் கர்நாடக இசை பயின்றனர்.

இதனைத் தொடர்ந்து, சென்னைக்கு வந்து இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர்களை பம்பாய் சகோதரிகள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் இணைந்து கடந்த 50 ஆண்டுகளாக பல மொழிகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.

இவர்களின் இசைப் பணிக்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ, தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளனர்.

இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த லலிதா, செவ்வாய்க்கிழமை காலமானார். சென்னை பெசண்ட் நகர் இல்லத்தில் இவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான என்.ஆர்.சந்திரன் இவரது கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT