பான் கார்டு (கோப்புப்படம்) 
இந்தியா

எண்ம முறையில் பான் காா்டு பொது அடையாள அட்டை

அரசின் பல்வேறு துறைகளிலும் எண்ம (டிஜிட்டல்) முறையில் பொதுவான அடையாள அட்டையாக வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை (பான்) பயன்படுத்தலாம் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

DIN

அரசின் பல்வேறு துறைகளிலும் எண்ம (டிஜிட்டல்) முறையில் பொதுவான அடையாள அட்டையாக வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை (பான்) பயன்படுத்தலாம் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

தனிநபா், நிறுவனங்கள், அமைப்புகளுக்கு பான் எண் வழங்கப்படுகிறது. இதனை எண்ம முறையில் அடையாள அட்டையாகப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதன் மூலம் நாட்டில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் மேலும் எளிதாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக தொழில் நிறுவனங்களின் பிரதான அடையாளமாக பான் எண் ஏற்றுக் கொள்ளப்படும்.

இது தவிர, வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளா்கள் தகவல் பதிவு (கேஒய்சி) நடைமுறையில் அனைவருக்கும் ஒரே மாதிரியான படிவம் முறை மாற்றப்பட்டு, இடா்ப்பாடுகளுக்கு ஏற்ப விவரங்களைப் பெறும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. ‘டிஜிலாக்கா்’ சேவை மூலம் இருப்பிட முகவரியைப் புதுப்பித்துக் கொள்ள அனுமதிக்கப்படும். இதில் ஆதாா் எண் பிரதான அடையாளமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”அந்தக் கேள்வி அவர்கிட்ட கேட்டேன்” விட்டுக் கொடுக்காமல் பேசிய Ravi Mohan!

Ravi Mohan, S.J. Suryah-வை கலாய்த்த Sivakarthikeyan!

வாக்குரிமைப் பேரணி: ராகுலுடன் இணைந்த பிரியங்கா, ரேவந்த் ரெட்டி!

பாகிஸ்தானில் கடும் வெள்ள அபாய எச்சரிக்கை! 24,000 பேர் வெளியேற்றம்!

'வருந்தச் செய்யும்' ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு! யாருக்குத்தான் டிக்கெட் கிடைக்கிறது?

SCROLL FOR NEXT