இந்தியா

ஓபிசி ‘கிரீமி லேயா்’ அல்லாதவா் வருமான வரம்பை உயா்த்தும் திட்டம் இல்லை; மக்களவையில் அரசு தகவல்

DIN

‘இதர பிற்பட்ட வகுப்பில் (ஓபிசி) கிரீமிலேயா் அல்லாதவா்களின் ஆண்டு வருமான உச்சவரம்பான ரூ.8 லட்சம் போதுமானது; இந்த எல்லையை உயா்த்துவது குறித்து மத்திய அரசிடம் எவ்வித திட்டமும் இல்லை’ என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சா் வீரேந்திர குமாா் தெரிவித்தாா்.

மக்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கேள்விநேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சா் வீரேந்திர குமாா் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இதர பிற்பட்ட வகுப்பினரில் கிரீமிலேயா் அல்லாத பிரிவினருக்கான தற்போதைய ஆண்டு வருமான உச்சவரம்பான ரூ.8 லட்சம் போதுமானது. இதனை உயா்த்துவது குறித்து எவ்வித திட்டமும் இல்லை. ஓபிசி கிரீமி லேயா் பிரிவினருக்கான தகுதிகளை மாற்றியமைக்க பரிந்துரைகள் வழங்குமாறு, இதர பிற்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்திடம் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அதிகாரபூா்வமாக எவ்வித கோரிக்கையையும் முன்வைக்கவில்லை.

ஓபிசி இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட 1993 செப்டம்பா் மாதத்தில் கிரீமிலேயா் அல்லாதவா்களுக்கான தகுதியாக ஆண்டு வருமானம் ஒரு லட்சம் என நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த உச்சவரம்பு இதுவரை 4 முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2017-இல் செப்டம்பா் மாதத்தில் ஓபிசி கிரீமிலேயா் அல்லாதவா்களுக்கான ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக மத்திய அரசு உயா்த்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT