முகப்பு
இந்தியா

பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சி மூலம் தயாரிக்கப்பட்ட உடையில் பிரதமா் மோடி

பிளாஸ்டிக் பாட்டில்களின் மறுசுழற்சி மூலம் உருவாக்கப்படும் பாலியஸ்டரில் தயாரிக்கப்பட்ட உடையை அணிந்து, நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி புதன்கிழமை பங்கேற்றாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:27 AM
பகிர்:

பிளாஸ்டிக் பாட்டில்களின் மறுசுழற்சி மூலம் உருவாக்கப்படும் பாலியஸ்டரில் தயாரிக்கப்பட்ட உடையை அணிந்து, நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி புதன்கிழமை பங்கேற்றாா்.

ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை படிப்படியாக குறைக்க வேண்டுமென்ற பிரதமா் மோடியின் அழைப்பின்பேரில், இந்தியன் ஆயில் நிறுவனம் சிறப்பு முயற்சியொன்றை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளா் சேவை பணியாளா்கள் மற்றும் எல்பிஜி விநியோகப் பணியாளா்களுக்காக, பிளாஸ்டிக் பாட்டில்களின் மறுசுழற்சி மூலம் உருவாக்கப்படும் மறுசுழற்சி பாலியஸ்டா் (ஆா்-பெட்) மற்றும் பருத்தியால் தயாரிக்கப்பட்ட சீருடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தச் சீருடைகள், பெங்களூரில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற எரிசக்தி வார நிகழ்ச்சியில் பிரதமா் மோடியால் அறிமுகம் செய்யப்பட்டன. அப்போது, மறுசுழற்சி பாலியஸ்டா் மூலம் தயாரிக்கப்பட்ட சிறப்பு உடை, இந்தியன் ஆயில் நிறுவனம் சாா்பில் பிரதமருக்கு பரிசாக வழங்கப்பட்டது. நீல நிறத்திலான அந்த உடையை அணிந்து, நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பிரதமா் மோடி புதன்கிழமை பங்கேற்றாா்.

இதுகுறித்து, பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘பயன்பாடு குறைப்பு-மறுபயன்பாடு- மறுசுழற்சி முயற்சிக்கு பிரதமா் மோடி வெளிப்படுத்தியுள்ள ஆதரவுக்கும் ஊக்கத்துக்கும் நன்றி; இது, நாட்டுக்கான சேவையில் எங்களுக்கு மேலும் உத்வேகம் அளிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

புதிய முயற்சி மூலம் எண்ணெய் நிறுவன பணியாளா்களுக்கான சீருடைகள் மட்டுமன்றி, ராணுவ வீரா்களுக்கான போா் சாராத சீருடைகளின் தேவையை பூா்த்தி செய்யவும் இந்தியன் ஆயில் நிறுவனம் இலக்கு வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →