இந்தியா

உச்ச நீதிமன்றத்துக்கு மேலும் இரண்டு நீதிபதிகள் நியமனம்; நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆக உயர்வு!

DIN


புதுதில்லி: உச்ச நீதிமன்றத்துக்கு மேலும் புதிய நீதிபதிகளாக 2 உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெள்ளிக்கிழமை(பிப்.10) நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டால், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக இருக்கும்.

உச்ச நீதிமன்ற கெலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று, "இந்திய அரசியலமைப்பின் கீழ் உள்ள விதிகளின்படி, அலகாபாத் உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டல், குஜராத் உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகிய 2 நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் நியமித்து அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். 

உச்ச நீதிமன்றத்திற்கு மேலும் இரண்டு நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களின் பெயர்களை உச்ச நீதிமன்ற கெலீஜியம் கடந்த மாதம் பரிந்துரை செய்தது என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டால், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக இருக்கும்.

கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக ஐந்து நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சென்னை வெற்றி பெற 142 ரன்கள் இலக்கு

ஜார்க்கண்ட்: காங். அமைச்சருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேற்கு வங்கத்தில் பாஜக அலை வீசுமா? நட்சத்திர வேட்பாளர்களிடையே போட்டி

பேல் பூரி

மும்பை இந்தியன்ஸின் வெற்றியை கடினமாக்கிய வருண் சக்கரவர்த்தி: ஆஸி. முன்னாள் வீரர்

SCROLL FOR NEXT