இந்தியா

பாஜகவுக்கு உதவும் செயலில் திரிணமூல்: காங்கிரஸ்

DIN

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு உதவும் விதமாக திரிணமூல் காங்கிரஸ் செயல்படுவதாக திரிபுரா மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் அஜோய் குமார் தெரிவித்துள்ளார்.  

திரிணமூல் காங்கிரஸ் பாஜகவுக்கு சாதகமாக செயல்பட்டாலும் அவர்களால் காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணிக்கு எந்த ஒரு இடையூறும் அளிக்க முடியாது எனவும் தெரிவித்தார். 

இது குறித்து அவர் பேசியதாவது: திரிபுராவில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி வலுவாக உள்ளது. தலைவர்களுக்குள் ஒரு சில பிரச்னைகள் இருந்தாலும், கட்சியைச் சேர்ந்தவர்களும், மக்களும் ஒன்றாக இணைந்துள்ளனர். நான் திரிபுரா முழுவதும் பயணம் செய்து வருகிறேன். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கு கிடைக்கும் வரவேற்பை என்னால் பார்க்க முடிகிறது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ஜிதேந்திர சௌத்ரி பழங்குடியின மக்களின் தலைவராக இருந்து வருகிறார். அவர் பழங்குடியின மக்களின் மொழியினைப் பேசி அவர்களுள் ஒருவராக இருக்கும் தலைவராக உள்ளார்.

அவர் இந்த மண்ணின் மைந்தன். அதனால், அவர் பழங்குடியின மக்களின் நலனுக்காக உழைப்பார் என அந்த மக்களுக்கும் நன்றாகத் தெரியும். பழங்குடியின மக்கள் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் பக்கம் மாறி வருகின்றனர். 60 தொகுதிகள் கொண்ட திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் 20 இடங்கள் பழங்குடியினப் பகுதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. திரிணமூல், காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணிக்கு சேதம் விளைவிக்கும் விதமாக தேர்தலில் களம் காண்பதாகத் தோன்றுகிறது. அதனால், எங்களது கூட்டணிக்கு இடையூறு ஏற்படும் என்று தோன்றவில்லை. பாஜவுக்கு ஆதரவளிக்கும் விளையாட்டை திரிணமூல் காங்கிரஸ் விளையாடி வருகிறது. பாஜகவுக்கும், திரிணமூல் காங்கிரஸுக்கும் இடையில் ஏதோ நடந்து கொண்டிருக்கிறது. திரிபுராவில் காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி ஆட்சியமைக்கும். மக்கள் அனைவரும் பாஜகவின் மீது கோபத்தில் உள்ளனர். பாஜக பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருகிறது என்றார். 

60 தொகுதிகள் கொண்ட திரிபுரா மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற பிப்ரவரி 16 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

50 சட்ட தன்னாா்வ தொண்டா்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கோடையில் குறுகிய கால பயிா் சாகுபடி

கிராமப்புறங்களில் தடையின்றி குடிநீா் விநியோகம்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் உத்தரவு

SCROLL FOR NEXT