இந்தியா

திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி: அமித்ஷா

திரிபுராவில் பாஜக ஆட்சி அமைந்தால் கல்லூரி மாணவிகளுக்கு ஸ்கூட்டி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

DIN

திரிபுராவில் பாஜக ஆட்சி அமைந்தால் கல்லூரி மாணவிகளுக்கு ஸ்கூட்டி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

செபஹிஜாலா மாவட்டத்தில் நடந்த பேரணியில் அவர் பேசுகையில்,  திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கல்லூரியில் படிக்கும் ஒவ்வொரு மாணவிக்கும் இலவசமாக ஸ்கூட்டி வழங்கப்படும். காங்கிரசுடன் கூட்டணி வைத்ததன் மூலம் தேர்தலுக்கு முன்பே கம்யூனிஸ்டுகள் தோல்வியை ஏற்றுக்கொண்டனர். பிரதமர் மோடியும், முதல்வர் மாணிக் சாஹாவும் திரிபுராவில் வளர்ச்சிக்காக உழைக்கின்றனர். 

அதேசமயம் மாா்க்சிஸ்ட், காங்கிரஸ் மற்றும் திப்ரா மோத்தாவும் மாநிலத்தில் மீண்டும் காட்டாட்சியை கொண்டுவர விரும்புகின்றன. முன்னதாக, சந்திப்பூரில் நடைபெற்ற பேரணியில் பேசிய அமித்ஷா, பாஜகவை அவர்களால் தனித்து எதிர்கொள்ள முடியவில்லை. காங்கிரஸ் வெட்கப்பட வேண்டும், பல உறுப்பினர்களைக் கொன்ற மாா்க்சிஸ்ட்-வுடன் கூட்டணி வைத்துள்ளது. 

காங்கிரஸும் மாா்க்சிஸ்டும் திரிபுராவிற்கு எதுவும் செய்யவில்லை. பாஜக ஆட்சியில் திரிபுராவில் வளர்ச்சி ஏற்பட்டது. அனைவரின் வளர்ச்சிக்காகவும் நாங்கள் உழைத்தோம். காங்கிரஸும் மாா்க்சிஸ்டும் ஆதிவாசிகளுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் இப்போது ஆதிவாசிகளின் வாக்குகளைப் பெற அவர்கள் ஒரு ஆதிவாசி முதல்வர் முகத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றார்.

60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் வரும் 16-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில், ஆளும் பாஜகவுக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே முக்கியப் போட்டி நிலவுகிறது. இதுதவிர, திரிணமூல் காங்கிரஸ், மாநிலக் கட்சியான திப்ரா மோத்தா ஆகியவையும் களத்தில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாரை விமர்சிப்பவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்! - ஜெயக்குமார்

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளேன்! - பிரிடோரியா வீரர் பிரேவிஸ்

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

SCROLL FOR NEXT