மத்தியப் பிரதேசத்திலுள்ள தேவாலயத்தில் தீக்கிரையான சுவரில் 'ராம்' என்ற வாசகம் 
இந்தியா

தேவாலயத்தை எரித்து 'ஸ்ரீ ராம்' பெயரை எழுத்திச்சென்ற மர்ம நபர்கள்!

மத்தியப் பிரதேசத்தில் கிறிஸ்தவ தேவாலயத்தினுள் தீயிட்டு எரித்து சுவர்களில் ஸ்ரீ ராம் என்ற வாசகத்தை மர்ம நபர்கள் எழுத்திச்சென்றுள்ளனர். 

DIN

மத்தியப் பிரதேசத்தில் கிறிஸ்தவ தேவாலயத்தினுள் தீயிட்டு எரித்து சுவர்களில் ஸ்ரீ ராம் என்ற வாசகத்தை மர்ம நபர்கள் எழுத்திச்சென்றுள்ளனர். 

மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரம்  மாவட்டம்  கேசலா தாலுகாவில்   உள்ள  சுக்தவா கிராமத்தில் கிறிஸ்தவ தேவாலயம் செயல்பட்டு வருகிறது.

இந்த தேவாலயம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியில் கட்டப்பட்டு, அங்குள்ள கிறிஸ்தவ மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இந்த தேவாலயத்திற்கு நேற்றிரவு வந்த மர்ம நபர்கள், சன்னல் திரைச்சீலைகளுக்கு தீயிட்டு எரித்து, உள்ளே போட்டுள்ளனர். இதில், தேவாலயத்தில் இருந்த மரமேசை, நாற்காலிகள் சுவர்கள் தீயில் சேதமடைந்தன.

மேலும், தீயில் உண்டான புகையில் கருப்பாக மாறிய சுவரில் ராம் என்று எழுதிவிட்டுச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக தேவாலயம் தரப்பில் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. 

காவல் துறையினர் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல், பிற மதங்களை இழிவு செய்து புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT