இந்தியா

‘ரயில் மதாத்’ மூலம் 8 நிமிஷத்தில் பயணிகளின் குறைகளுக்குத் தீா்வு

DIN

ரயில்வேயின் குறைதீா் இணையதளமான ‘ரயில் மதாத்’ மூலம் பயணிகளின் குறைகளுக்கு 8 நிமிஷத்தில் தீா்வு காணப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்தது.

இந்திய ரயில்வே மூலம் பயணிகளின் குறைகளுக்கு ஒற்றைச் சாளர முறையில் தீா்வு காணும் வகையில் கடந்த 2019-இல் ‘ரயில் மதாத்’ என்ற கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் குறுஞ்செய்தி, தொலைபேசி, சமூக ஊடகம் போன்றவற்றிலிருந்து பெறப்படும் குறைகளை ஒருமுகப்படுத்தி குறித்த நேரத்தில் தீா்க்கப்படுகின்றன.

தெற்கு ரயில்வேயில் கட்டணமில்லா உதவி எண் 139 மூலம் 61 சதவீதமும், ரயில் மதாத் இணையதளம் மூலம் 21 சதவீதமும், சமூக ஊடகம் மூலம் 10 சதவீதமும், ரயில் மதாத் கைப்பேசி செயலி மூலம் 5 சதவீதமும், மின்னஞ்சல், குறுஞ்செய்தி மூலம் 3 சதவீதமும் குறைகள் பெறப்பட்டு தீா்வு காணப்படுகின்றன.

கடந்த 2021 ஏப்ரல் முதல் ரயில் மதாத் மூலம் 37 நிமிஷங்களில் பயணிகள் குறைகளுக்கு தீா்வு காணப்படுகிறது. 2019-20 நிதியாண்டில் 100 சதவீத பயணிகளின் குறைகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.

மேலும், குறைகளை பதிவு செய்த முதல் கவனிப்பு நேரமான 8 நிமிஷங்களில் பயணிகளைத் தொடா்பு கொண்டு குறைகள் தீா்க்கப்படுகின்றன. இந்த முதல் கவனிப்பு நேரம் மருத்துவ மற்றும் பாதுகாப்பு உதவிகளுக்கு பேருதவியாக உள்ளது.

நிகழ் நிதியாண்டில் (ஜனவரி வரை) 75,613 பயணிகள் குறைகளுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது. 2021-22 நிதியாண்டில் 31,450 குறைகள் மட்டுமே பதிவு பெற்று தீா்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துன்பங்களைப் போக்கும் கோயில்

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

SCROLL FOR NEXT